Thursday, May 31, 2012

பூம்புகார் - உலகின் முதல் நவீன நகர நாகரிகத்தின் பிறப்பிடம் ()

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001-ம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா" பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் கடந்த 1990 ம் ஆண்டில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஓர் ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 93-ம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்த சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
இது தவிர சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன "ட" வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன், நீரில் சுமார் 23 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும், 2 மீ உயரமும் கொண்ட பல பொருள்கள் கண்டறியப்பட்டன.
இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம், தன்னுடைய ஆய்வை நிதிப்பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த கிரஹாம் ஹான்காக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சேர்ந்த "சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001-ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது.
பின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார்.
இந்த நகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக் கருதினார்.
தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார்.
இதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார். சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கூடும் என்றும், அதனை வைத்துப் பார்க்கும் போது இந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார்.
இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், நமது பூம்புகார் நகரில் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தெளிவாகிறது.

பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை, கடந்தவாரம் பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட் (Adultery + Gambling = IPL cricket)

Adultery + Gambling = IPL cricket - Tamil Katturaikal - General Articles உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, "விளையாட்டு" என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர். ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது. விலைவாசி உயர்வு, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், உழவர்களை அழித்து விட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேளாண்மையைத் தாரை வார்க்கும் அதிரடிச் சட்டங்கள் என விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மறக்கப்பட்டு, அவை துண்டுச் செய்திகளாயின. ஐ.பி.எல். தலைப்புச் செய்தியானது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, மட்டையடி விளையாட்டு வீரர்களை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து, தொடக்கத்திலேயே தன் வணிகத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டது தான், ஐ.பி.எல். அமைப்பு.
2008 ஆம் ஆண்டு, முன்னணி மட்டையடி வீரர் கபில் தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து "இந்தியன் கிரிக்கெட் லீக்" (ஐ.சி.எல்.) என்ற ழைக்கப்பட்ட அமைப்பைத் தோற்றுவித்தார். பல்வேறு நாட்டு ஓய்வு பெற்ற மட்டையடி விளையாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அணிகளை உருவாக்கி, விளையாட்டு நேரத்தைக் குறைத்து பரபரப்பானப் போட்டிகளை நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இவ்வமைப்பின் "உயரிய" நோக்கம்.
இவ்வமைப்பின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட, இந்திய மட்டையடி வாரியத்தின் பண முதலைகள், அவ்வமைப்பன் வழியே தானும் பணம்சம்பாதிக்கத் திட்டமிட்டது. ஐ.சி.எல். அமைப்பை சீர்குலைக்கும் வகையில், ஐ.பி.எல். என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. நடுவண் காங்கிரஸ் அரசில் பங்கு வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திய மட்டையடி வாரியத்தின் பேரங்களை முன்னின்று நடத்துபவருமான அமைச்சர் சரத் பவார் இதற்கு பின்னணியில் இருந்தார். அவரைப் போன்றே தரகு வேலைகளில், ஈடுபடுவதில் "திறமைசாலி"யான இந்திய மட்டையடி வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்தே, ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல "விளையாட்டு" வீரர்கள், ஐ.பி.எல். போட்டிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அம்பானி, விஜய் மல்லையா போன்ற பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற தனியார் பெரு நிறுவனங்களும், சீரழிந்த உலகமயப் பண்பாட்டை போதிக்கும் "டெக்கான் க்ரோனிக்கல்" போன்ற ஊடகங்களும், அப்பண்பாட்டை செயலில் காட்டும் சாருக்கான், ப்ரீத்தீ ஜிந்தா போன்ற நடிகர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய ரூ. 2000 கோடி இலாபம் சம்பாதித்தத்தோடு மட்டுமின்றி, போட்டிக்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு, ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள் என மேலும் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தது, ஐ.பி.எல்.
ஐ.பி.எல். ஏலம் எடுக்கப்பட்ட போதே, அந்த ஏலத்தில் புழங்கியப் பணம் எங்கிருந்து வந்தது என்று நடுவண் அரசு கூட ஆராய்ந்திடவில்லை. உழவர்கள் தற்கொலை, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது குறித்தெல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள், ஐ.பி.எல். ஏலத்தொகையைக் கணக்குக் காட்டி "இந்தியா" வளர்ந்து விட்டதாக பெருமையடித்தன.
ஐ.பி.எல். மட்டையடிப் போட்டிகளின் நடுவில் "இளைப்பாறுதல்" என்ற பெயரில், அரைகுறை ஆடைப் பெண்களை ஆடவிடுவதும், நடிகைகளை விட்டுக் கட்டிப்பிடிக்க வைப்பதும், போட்டி முடிந்ததும் தினமும் நடத்தப்படுகின்ற, "இரவு விருந்தில்" நடக்கும் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளும், அது சார்ந்திருக்கும், உலகமய நுகர்வியப் பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்ள வலியுறுத்துகின்ற இந்த, உலகமய பாலியல் சீரழிவுகளுக்கு "பாலியல் விடுதலை" என்று புதுப்பெயர் வைத்து, வளர்க்கின்றன ஊடகங்கள். கோடி கோடியாகக் கொள்ளையடித்த முதலாளிகளும், அவர்தம் கையாள் அரசியல்வாதிகளும், அவர்களது வாரிசுகளும், விலை மாதர்களுடன் கொஞ்சிக் குலாவுகின்ற, அந்த இரவு விருந்துகளில் கலந்து கொள்ள ஒருவருக்கான அனுமதிச் சீட்டின் இன்றைய நிலவரப்படி, விலை 40,000 ரூபாய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
உலகமய நுகர்வியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய, மேட்டுக்குடியினர் மட்டுமின்றி, உலகமயப் பாலியல் சீரழிவுகள் மீதான கவர்ச்சியால் ஈர்க்கப்படும் நடுத்தர வர்க்கத் தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களும், ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்ப்பதோடு, இந்த இரவு விருந்துகளில் பெருமளவில் கலந்தும் கொள்கின்றனர்.
இவ்வாறு, கோடி கோடியாக இலாபம் சம்பாதித்து வந்த ஐ.பி.எல். இந்தக் கொள்ளையின் இலாபம் போதாமல், இவ்வாண்டு மேலும் 2 புதிய அணிகளை உருவாக்கிக் கொள்ளையிடத் திட்டமிட்டது. இதன் விளைவாகவே புனே, கொச்சி என புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டன. கொச்சி அணி அதிகபட்சமாக ரூ. 1553 கோடி களுக்கு ஏலம் போனது.
மொரீசியஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அங்கிருந்து செயல்படுவதாக கூறிக் கொள்ளும் பல போலி நிறுவனங்கள் கருப்புப் பணத்தை "முதலீடு" என்ற பெயரில், இந்தியாவிற்கு அனுப்பி வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றன. இவ்வகை முதலீடுகள் ஐ.பி.எல். போட்டியிலும் பெருமளவு குவிந்துள்ளன என்பதை, ஐ.பி.எல். ஏலத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்த போது தெரியவந்தது.
தமது ட்விட்டர் இணையதளப் பக்கங்களில், கொச்சின் அணியின் உண்மையான உரிமையாளர்கள் யார் யார் என, ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடி ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதும், ஐ.பி.எல். விதிமுறைகள் மீறப்பட்டு, அதன் மரியாதை மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார், காங்கிரஸ் நடுவண் அமைச்சர் சசி தரூர். இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சசாங் மனோகரும், லலித் மோடி வெளியிட்ட "இரகசியங்களுக்கு" எதிராகக் கண்டனம் தெரிவித்தார்.
நடுவண் அமைச்சர் சசி தரூரின் பதட்டப் பின்னணியை ஆராய்ந்த போது, கொச்சி அணியின் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பது, துபாயில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான சுனந்தா புஷ்கர் என்று தெரியவந்தது. அவர் சசி தரூரின் வருங்கால மனைவி என பேசப்படுபவர். பட்டியலை வெளியிட்ட பின், இதனை வெளியிடக் கூடாது என தம்மை அமைச்சர் சசி தரூர் மிரட்டினார் என்று லலித் மோடி மேலும் கூறினார்.
"மெத்தப் படித்தவர், நிர்வாகவியல் தெரிந்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்" என்றெல்லாம் ஊடகங்களால் காட்டப்பட்ட சசி தரூர், அந்த செல்வாக்கின் மூலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்று, அமைச்சராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மலையாளி என்பது அவருக்குள் சிறப்புத் தகுதி. தற்போது, தம் காதலி சுனந்தாவிற்கு ஐ.பி.எல். அணியின் பங்குகளை வாங்கிக் கொடுத்தது போல், வேறு சில பினாமிகளின் துணையோடு வேறு அணிகளையும் தம் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தாரா என்ற ஐயம் அனைவரிடத்தும் வலுவாக எழுந்தது.
"நல்ல நிர்வாகி" என்றெல்லாம் போற்றப்பட்ட லலித் மோடி, "அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அடிதடி வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையிலிருந்தவர். அவருக்குத் தான் நாம் உயர்பதவி கொடுத்திருக்கிறோம்" என அமைச்சர் சசி தரூரின் செயலாளர் ஜாக்கப் ஜோசப், லலித் மோடிக்கு எதிராக வெளிப்படையாக சீறி எழுந்தார்.
பெருமுதலாளிகளும், முதலாளிகளின் ஊடகங்களும், அதில் நடித்த நடிகர்களும் தாம் கொள்ளையடித்தப் கருப்புப் பணத்தை, கண் முன்பே வெள்ளையாக மாற்றுவது குறித்தும் எந்த தேர்தல் கட்சியும் சீறவில்லை. மாறாக, அதில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வையோடே ஐ.பி.எல். மீது கரிசனத்தோடு கிடந்தனர். இந்நிலையில், பா.ஜ.க. அதுவரை ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்த்து வந்தது. ஆனால் காங்கிரஸ் நடுவண் அமைச்சர் ஒருவர் தம் அதிகாரத்தின் மூலம், தம் காதலிக்கு பங்குகள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதும், "திடீர்" அக்கறையோடு நாடாளுமன்றத்தை கேள்விகளோடு முற்றுகையிட்டது.
உழவர்களை நசுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சசி தரூரின் அதிகார மீறலுக்கு எதிராக "பொங்கி" எழுந்தனர். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் படிந்து, சசி தரூரின் பதவியைப் பறித்து, நல்லவர் போல தமக்கு ஏதும் தெரியாதது போல் வேடமிட்டுக் கொண்டு, சிக்கலை அத்தோடு முடிக்க நினைத்தது சோனியா - மன்மோகன் அரசு.
2009ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போது கூட, அதனை மதிக்காது புறந்தள்ளி, இந்திய அரசுக்கு சவால் விடுக்கும் விதமாக அப்போட்டிகளை தென்னாப்பரிக்காவில் நடத்தியது, ஐ.பி.எல். அமைப்பு. அப்போதும், நடுவண் அரசு லலித் மோடி மீது சினங்கொள்ளவில்லை. தற்போது, ஐ.பி.எல். ஊழலில் தம் கட்சி அமைச்சர் ஒருவர் பதவி இழந்து, ஊரெல்லாம் காறி உமிழும் நிலைவந்த பின்னர் தான், அவமானம் தாங்காமல் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது, நடுவண் காங்கிரஸ் அரசு.
இதுவும் தற்காலிகமான நடவடிக்கைகளே. திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு, அதில் நல்ல "விலை"யும் பேசப்பட்டு விட்டால், காங்கிரஸ் அரசு ஐ.பி.எல். அமைப்பின் கொள்ளைகள் குறித்து சிறிதும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஐ.பி.எல். அமைப்பு தான் கொள்ளையடித்த பணத்தில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு கொடுத்திருந்தால், பாராளுமன்றத்தில் அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கமாட்டார்கள். பங்கு கொடுக்காததால், ஐ.பி.எல்.லுக்கு வந்தது சிக்கல்.
ஐ.பி.எல். அமைப்புக்கு மட்டுமின்றி, உற்பத்தியில் ஈடுபடாத நிதி புழங்குகின்ற எந்தவொரு தனியார் அமைப்பின் ஊழல்கள் - மோசடிகள் அம்பலமாகின்றதென்றால், அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் பண பேரம் படியவில்லை என்று தான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில், இதுவே இன்றைய உலகமய காலகட்டத்தின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
அரசுக்கு சவால் விடுக்கும் அளவிற்குப் பணவலு பெற்றிருந்த ஊழலிலும் கூட லலித் மோடி மீது ஐயம் கொள்ளாத நடுவண் காங்கிரஸ் அரசு, இச்சிக்கலில் தம் அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் தான் ஐ.பி.எல். குறித்து உற்று நோக்கத் தொடங்கியது. ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்களின் அலுவலகங்கள், ஒளிபரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் என பலரது வீடுகளும் வருமானவரித் துறையினரால் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டன.
மும்பையில் இயங்கிய லலித் மோடி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தவருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றது, அங்கிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனை விஜய் மல்லையாவும் ஒப்புக் கொண்டார். இருந்த போதும், அவர் எடுத்துச் சென்ற கோப்புகள் குறித்து லைலாவிடம் விசாரித்து, விஜய் மல்லையாவின் கோபத்தை சம்பாதிக்க காங்கிரஸ் அரசு ஒன்றும் ஏமாளி அரசல்ல. அடுத்த தேர்தலில் அவரிடம் தான் தேர்தல் நிதி வசூலுக்குப் போய் நிற்க வேண்டியிருக்கும். எனவே, அந்தக் கோப்புகள் காணாமல் போனது போனதாகவே இருக்கட்டும் என அங்கிருந்து கிளம்பினர் வருமான வரித் துறையினர்.
இந்த சோதனைகளின் முடிவில், சசி தரூர் மீது புகார் கூறிய, லலித் மோடி அவரை விடப் பெரிய மோசடிக்காரர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 19 இலட்சம் வருமானவரி செலுத்திய லலித் மோடி, 2008-2009 நிதியாண்டில் 32 இலட்சம் வரி செலுத்தினார். 2009ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் வரியை முன்பணமாக செலுத்திவிட்டார். லலித் மோடியின் இந்த "அபார" வளர்ச்சி, அரசியல்வாதிகளை மட்டுமின்றி இந்திய மட்டையடி வாரிய உறுப்பனர்களில் பலருக்கும் எரிச்சலூட்டத் தொடங்கியது.
வருமானவரித் துறையினரின் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின், லலித் மோடி செய்த பல்வேறு தில்லுமுல்லுகள் தெரிய வந்தன. "அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்" என சசி தரூரை குற்றம் சாட்டிய லலித் மோடியோ, தம் சுற்றத்தாரை பினாமிகளாக்கி அணிகளை ஏலத்தில் எடுத்திருந்தது அம்பலமானது. மேலும், போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டம் நடத்தியது உட்பட பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்தன.
ராஜஸ்தான் அணியின் 25 விழுக்காட்டுப் பங்குகள், நைஜீரியாவைச் சேர்ந்த லலித் மோடியின் ஒன்று விட்ட சகோதரர் சுரேதீ செல்லாராம் என்பவர் வைத்திருக்கிறார். கொல்கத்தா அணியின் 45 விழுக்காட்டுப் பங்குகளை மொரீசியசைச் சேர்ந்த "சீ ஐலாண்டு" நிறுவனத்தின் தலைவர் ஜெய் மேத்தா என்பவர் பெற்றுள்ளார். இவர் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் மட்டுமின்றி லலித் மோடியின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் கவுரவ் பர்மா இங்கிலாந்தில் இயங்கும் "பெட்பேர்" எனப்படும் சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்புடையவர் என, வருமான வரித்துறையினரின் கமுக்க அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, "தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு எழுதியது. (காண்க: எக்னாமிக் டைம், ஏப்ரல் 19, 2010).
அணிகளைப் பினாமிகளின் பெயரால் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி மீது மேலும் எழுந்தன. ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக் காட்சி ஒளிபரப்பு உரிமைகளில் மோசடி நடந்ததும் அம்பலமானது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிரப்புவதற்காக, ரூ. 8225 கோடி ரூபாய்க்கு, மொரீசியசில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கீரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உரிமையை பெறுவதற்காக, சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத் திடமிருந்து ரூ. 125 கோடி கைளிட்டு பெற்றதை வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டது, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம். இதிலும், லலித் மோடியின், மோடி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு தொடர்பிருந்தது தெரியவந்தது.
"அரசுத்துறை நிறுவனங்கள் லஞ்சத்தில் திளைப்பவை. அரசு ஊழியர்கள் அனைவரும் சோம்பேறிகள். தனியார் நிறுவனங்களே வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வல்லவை" என்று உலகமய ஊடகங்கள் போதித்து வருகின்றன. ஆனால், இன்றோ அந்த ஊடகங்களில் நடைபெறுகின்ற லஞ்ச ஊழல்களே வாய்பிளக்க வைக்கின்றன.
வேகமாக வளர்ந்து வரும் லலித் மோடியின் செல்வாக்கால் திணறிய இந்திய மட்டையடி வாரியமும், நடுவண் காங்கிரஸ் அரசும் இந்த ஊழலை, பயன்படுத்தி லலித் மோடியை அப்பதவியிலிருந்து தூக்கி விட்டு, வேறொருவரை அப்பதவியில் அமர்த்தும் நடவடிக்கையில் இறங்கின. "முடிந்தால் நீக்கிப் பாருங்கள்" என சவால் விடுத்தார் லலித் மோடி. மோடியின் சவாலுக்கு பின்புலமாக, ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுத்த பண முதலைகள் நிற்பது உலகறியாததல்ல.
முற்றிலும் வணிகமயமாகி சூதாட்டமாகவும் விபச்சாரமாகவும் ஆகிவிட்ட மட்டையடி விளையாட்டைப் புறக்கணித்து, உடலுக்கு உற்சாகம் தருவதோடு தம் இனத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்ற தேசிய இன விளையாட்டுகளில் நடுத்தர வர்க்க இளைஞர்கள் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.
மேலும், "தேசிய விளையாட்டு" என இந்திய அரசு பறைசாற்றிக் கொள்ளும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு, சம்பளம் தராமல் இழுத்தடிப்பதும், அயலார் விளையாட்டான மட்டைப்பந்து போட்டிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், இந்திய அரசுக்கே உரிய "வந்தேறித் தன்மை"யைத்தான் வெளிப்படுத்துகின்றது.
தேர்தல் அரசியல்வாதிகளும், முதலாளியத் தரகர்களும் இணைந்து நடத்துகின்ற சூதாட்டத் திருவிழாவான, இந்த ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும். ஐ.பி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை அரசுடைமையாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த அரசும் முன்வராது என்று தெரிந்தே இக்கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். மக்களை ஆளுகின்ற அரசுகளிடம் அல்ல, ஆளுகின்ற அரசுகளைத் திருப்பித் தாக்கும் திறனுள்ள மக்களிடம் தான் இதனை எழுப்பியாக வேண்டும்.

நன்றி: தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டம்

நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!: கவிஞர் தாமரை

நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம் என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்கள் பயணம் சென்று வந்திருக்கும் கவிஞர் தாமரை தமிழ் இணையதளம் ஒன்றிற்கு வழங்கி பேட்டியில் கூறியுள்ளதாவது:-
உலகத்தின் கண் பார்க்க ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராசபக்சே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் இரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்றன.
இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம் வெதும்பிக் கிடப்பது மூடத்தனம். அதனால்தான், அடிபட்ட புலியாய் மறுபடியும் ஆர்த்தெழத் தொடங்கி இருக்கிறது தமிழினம். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசு அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. சட்டத்துக்கு உட்பட்டு தமிழர்கள் எடுக்கும் இத்தகைய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகள் சிங்களத்தின் கழுத்தில் கயிறு வீசி இருக்கின்றன. இந்த நேரத்தில், ஒருசேர நாம் திரள்வதுதான் நம்மை சதிராடியவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். இதை தமிழகத் தமிழர்களும் தணியாத வேகத்தோடு கையில் எடுக்க வேண்டும்!
கேள்வி: சிறப்புத் தூதர் அனுப்பச் சொல்லியும், மீள் குடியேற்றத்துக்கு உதவக் கோரியும் முதல்வர் கருணாநிதி எடுக்கும் முயற்சிகளை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
பதில்: கருணாநிதியை வசைபாடுகிறார்கள். "அவருக்கு நாங்க என்ன பாவம் பண்ணினோம்? அவர் நினைச்சிருந்தா, இந்த அழிவைத் தடுத்திருக்கலாமே! இத்தனை மக்கள் செத்தும் அவர் மனசில் இரக்கமே சுரக்கலையா?" எனத் தாய்மார்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினார்கள். ஜெயலலிதாவை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை. கடைசி நேரத்திலாவது எப்படியாவது தலையிட்டு கருணாநிதி போரை நிறுத்திவிடுவார் எனப் புலம்பெயர் தமிழர்கள் நம்பி இருந்தனர். ஆனால், வெறுமனே உண்ணாவிரதம், கடிதம் என கருணாநிதி நடத்திய நாடகங்கள் அவர்களைப் பொங்கவைத்துவிட்டது. தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத பல உலக நாடுகள் ராசபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கச் சொல்லி போராடி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம்கூட இயற்றாமல், இன்னமும் கடிதம் எழுதுவதை உலகத் தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை. இதற்கிடையில், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவம் உலகத் தமிழர்களைப் பெரிதாகக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அவர்களின் அகராதியில் கருணாநிதி என்கிற பெயரைக்கூட இனி வைத்திருக்க மாட்டார்கள்!
கேள்வி: முதல்வர் நடத்திய செம்மொழி மாநாட்டுக்கு உலகளாவிய தமிழர்களிடம் என்ன எதிர்வினை?
பதில்: செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாடு வாழ் தமிழர்களையும் நான் சந்தித்தேன். கவியரங்கம் என்ற பெயரில் நடந்த புகழார வைபோகங்களைச் சொல்லி, "இதுதான் செம்மொழிக்கான சிறப்பா?" என வேதனைப்பட்டனர். தனது கறையைத் துடைக்க கருணாநிதி எடுத்த முயற்சியாகவே செம்மொழி மாநாட்டைப் புலம்பெயர் தமிழர்கள் பார்த்தார்கள். அந்த மாநாட்டின் மொத்த நிகழ்ச்சிகளையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. மாநாட்டில் எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு குறைகள்தான். தமிழனின் சாதனைச் சின்னங்களாக 40 ஊர்திகளை அணிவகுக்கச் செய்தார்கள். அதில் 41-வது ஊர்தியாக "இப்படி எல்லாம் வாழ்ந்த தமிழனை எப்படி எல்லாம் காட்டிக்கொடுத்தோம்" என்பதையும் அணிவகுக்கச் செய்திருந்தால், தமிழின வரலாறு முழுமை பெற்றிருக்கும். அடுத்து, மாநாட்டை முடித்துவைக்க ராசபக்சேயை அழைத்திருக்க வேண்டும். தமிழினத்தை முடித்துவைத்ததுபோல், தமிழ் மாநாட்டையும் அவர் முடித்துவைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். விட்டுத்தள்ளுங்கள் அந்த வீண் கச்சேரியை..!
கேள்வி: சீமானின் கைது ஏதேனும் கவனிப்பைப் பெற்றிருக்கிறதா?
பதில்: உலகளாவிய தமிழர்கள் சீமானைத் தீரம் மிகுந்த நாயகனாகப் பார்க்கிறார்கள். அவர் வெளியில் இருந்து தொடர்ந்து போராட வேண்டும் என எண்ணுகிறார்கள். நான் சென்ற பல இடங்களிலும் அவருக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது.
கேள்வி: நடிகை அசின் தொடங்கி கருணாஸ் வரையிலான விவகாரங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் உங்களிடம் குமுறியதாக இணையதளங்களில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: ஈழத்தில் போர் நடந்தபோது இந்த அசின் எங்கே போனார்? இந்திப் பட சூட்டிங்குக்காக இலங்கைக்குப் போனதாகச் சொல்லும் அசின், அங்கே தமிழர்களுக்குக் கருணையோடு உதவியதாகவும் படங்கள் வெளியிட்டிருக்கிறார். ராசபக்சேயின் மனைவியோடு கை குலுக்கியபடி அவர் கருணைத் தாயாக மாறிய மர்மம்தான் தெரியவில்லை. சூட்டிங் என்கிற பெயரில் இலங்கைக்கு செல்வதாகச் சொல்லும் திரைப்படத் துறையினர் ஓர் உண்மையைத் தயவுகூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். ஈழப் படுகொலைகளுக்கு தக்க விளைவாக இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை.
இலங்கை அரசுக்குப் பிரதான வருமானம் சுற்றுலாதான். சூட்டிங்குக்காகத் திரைத் துறையினர் அங்கே போனால், அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு நாமே உதவுவது போன்றதாகிவிடும். இந்த உலகில் சூட்டிங் நடத்த வேறு இடமே இல்லையா? அசின் இந்திப் படத்தில் நடிக்கும் தைரியத்தில் தன் தரப்பை நியாயப்படுத்துகிறார். ஆனால், அவர் தமிழ்ப் படத்தில் தலைகாட்ட முடியாத அளவுக்குத் தக்க பதிலடி கிடைக்கும். சிங்களத்துக்குத் துணைபோகும் அத்தனை நட்சத்திரங்களையும் அடியோடு புறக்கணிக்க உலகத் தமிழர்கள் தயாராகிவிட்டார்கள்!
கேள்வி: கலைக்கு மொழி கிடையாது என்றும், நட்சத்திரங்கள் இலங்கைக்குச் செல்லும் விவகாரத்தில் அவரவர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது தவறு என்றும் அசினுக்கு ஆதரவாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சொல்லி இருக்கிறாரே?
பதில்: கலைக்கு மொழி கிடையாது எனச் சொல்லும் சரத்குமாரை இந்தியில் போய் நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். கலைக்கு மொழி இல்லை என எவரும் சொல்ல முடியாது. தமிழ்ப் படத்தை தமிழர்கள்தானே பார்க்கிறார்கள். அசினுக்கு ஆதரவாக சரத்குமார் சொன்ன கருத்தில் உலகத் தமிழர்கள் ஒருவருக்கும் உடன்பாடு இல்லை. அவர் தன்னல நோக்கில் செயல்படுவதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அசின், கருணாஸ் உள்ளிட்டவர்கள் இலங்கைக்குச் செல்வதில் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன் என்கிற பின்னணியை உலகத் தமிழர்கள் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்து பொருளாதார மேம்பாடு அடையத் துடிக்கும் சிங்கள சதிக்கு சரத்குமார் ஆளாகிவிடக் கூடாது என்பதுதான் என் பதற்றம்.
தமிழ் ஒருங்கிணைப்பைக் குலைக்கும்விதமாக கோடான கோடிகளைக் கொட்டி வரும் இலங்கைத் தூதர் அம்சா, தமிழ் நட்சத்திரங்கள் சிலரை லண்டனுக்கு வரவழைக்கப்போகிற விசயத்தையும் உலகத் தமிழர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் பெயர்களை வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால், நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடும், இன உணர்வோடும் செயல்பட வேண்டும். காரணம், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல! நடிகர் சங்கத் தலைவர்! ஒரு கட்சியின் தலைவர். அவர் மூலமாக தமிழ்த் திரையுலகையே இரண்டாக்க முடியும் என்பது சிங்கள அரசு போட்டுவைத்திருக்கும் திட்டங்களில் ஒன்று. அதற்கு சரத்குமார் ஒருபோதும் உடன்படக் கூடாது! கொல்லப்பட்ட மக்களின் பக்கமா? கொடூர ஆட்டம் போட்ட சிங்களத்தின் பக்கமா? என்பதை தமிழ் நட்சத்திரங்கள் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது!
கேள்வி: சுப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் தொடங்கி ஈழப் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களின் நிலைமை குறித்து தெரியவந்ததா?
பதில்: தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மே 17 வரை போர்க்களத்தில் இருந்து, எப்படியோ தப்பி வந்த சிலரும் இதனை மறுக்கவில்லை. அதே நேரம், "தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத் தருவார்" என்கிற முழக்கத்தைத் தவிர்த்து, "நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!" என முழங்கும்படி நான் வேண்டினேன். உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கப்பூர்வமான கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் கையில் தமிழீழத்தை ஒப்படைக்கும்! நரம்புகளில் நம்பிக்கை தெறிக்கச் சொல்கிறார் கவிஞர் தாமரை.

சீமான் கைது - தமிழ்த்தேசிய விடியலுக்கான புள்ளி

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது மீண்டும் ஒரு வழக்கினை பதிவு செய்து, கைது செய்துள்ளனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு.. நிர்வாணப்படுத்தப்பட்டு.. மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம், ஊழலும், துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது. என் சகோதரனைக் கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பேன் என்ற அறச் சீற்றம் சிங்களப் பேரினவாதத்தின் மீது மலர்ந்து விட்ட இந்தியாவின் கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.
ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து, அசைக்க முடியாத அதிகாரத்தின் மாட மாளிகை, கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாகக் கொண்டு வளர்ந்தன. கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா. இரண்டாம் உலகப் போரின்போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை, சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.

சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்கள் ஏந்தவைக்கும் துப்பாக்கிகள்தான் தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறிப் பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில் மிதந்து.. கால்கள் முளைத்து.. சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினைப் பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.
ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழ்கையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும், தமிழினச் சிறப்பினையும், பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்குப் பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார். ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையானது.

இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் குற்றவாளிகளைத் தேடும் அழகினையும், அவர்களைப் பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராசபக்சே உல்லாசப் பயணம் போக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு சிவப்பு கம்பள சிங்கார வரவேற்பு. போபால் விசவாயு வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ஆன்டர்சனை அரசே விமானம் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது. விமானத்தில் பாதுகாப்பாக ஆன்டர்சன் ஏறுகிறானா என்று பார்க்க அன்றைய மத்திய மந்திரி "புன்னகை புகழ்" நரசிம்மராவ் வேறு காவல் காத்த கதையும் இந்த நாட்டில் தான் நடந்திருக்கிறது. இந்திய நீதிமன்றங்களால் கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வுமிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். மத்திய அரசு ஒரு கொலைக்குற்றவாளிக்கு விருந்து உபச்சாரம் செய்து கூத்தடிக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய கருணாநிதியின் காவல்துறை வழக்கம் போல டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுகிறது. யார் இதைக் கேட்பது..?
இன்று சீமானை பிடிக்க 6 தனிப்படைகள் வைத்து பாய்ந்து பாய்ந்து செயல்படும் தமிழக காவல்துறையின் வீரம் அன்று எங்கே போனது..? இந்தியாவிற்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னமும் வாய்தாவிற்கு வாய்தா என நகர்ந்து நிலுவையில் இருக்கிறது. ஆனால் தனது சொந்த மீனவ சகோதரனின் கொலையினை சீமான் தட்டி கேட்கக் கூடாது. ஏனென்றால் சிங்களனைத் தட்டிக் கேட்பது என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலாக மாற்றப்பட்டுவிட்டது. குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவைப் பிடிக்க கடிதம் எழுதிய தமிழக காவல்துறை, இன்று தன் சொந்த சகோதரனின் கொலையில் வெகுண்டு பேசிய சீமானைக் கைது செய்ய வாகனங்களை மறிக்கிறது. அலைபேசிகளை அலசுகிறது. போர்க்குற்றம் செய்த சிங்கள அதிபனைக் காக்கத் துடிக்கும் ஆர்வத்தினை நம் மீனவன் உயிரின் மீது மத்திய மாநில அரசுகள் காட்டினார்களா..? இல்லையே..
பேச்சுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியலைப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினையும், அதன் தலைமையையும் ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் தன் சொந்த காழ்ப்புணர்ச்சியினாலும்.. காங்கிரஸ் மீதான தன் விசுவாசத்தினை விவரிக்கும் ஆர்வத்தினாலும் மாநில அரசு சீமானைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது போன்ற அடக்குமுறைகளால் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை தாகத்தினை முறியடித்து விடலாம் என்ற ஆட்சியாளர்களின் தவறான கணக்கு பிழையில் முடியப் போவதை எதிர்காலம் காட்டும்.

வீழ்ந்த இனம் இது போன்ற கைதுகளால் எழுவதற்கான- எழ வேண்டிய எத்தனிப்பிற்கான அவசியத்திற்கு தள்ளப்படுகிறது. காலம் நம்மை எந்தப் புள்ளியில் நகர்த்துகிறது என்பதை நாம் உணரத் துவங்குவோம். நம் தேசிய இனத்தின் ஒர்மைப்புள்ளியின் துவக்கமாக இதை நாம் கருதுவோம்.

தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை

கூடங்குளம் அணுஉலையை மூடிவிட வேண்டுமென்றும், அதனால் வரும் பேராபத்தும் பேரிழப்பும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்பதையும் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியாயிற்று. இதைப் பற்றி பல போராட்டங்களும் நடைபெற்று இன்றைய நாளில் இந்தப் போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது. அணு உலைகளினால் வரும் பேராபத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நடந்த சுனாமிக்குப் பிறகு உலகம் கண்டிருக்கிறது. அது மீண்டும் அதைப் பற்றிய விவாதத்தை அரங்கிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இது நாம் விழித்துக் கொள்ளும் நேரம்.
அணு உலை அமைப்பதினால் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும் அது கொண்டு வரும் பேரழிவைக் காண்கிறபோது அது கொண்டு வரும் நன்மையே தேவையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு அணு உலையிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிவருவதனால் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதனால் நவீன உலகில் எல்லாரும் மின்சக்தியைப் பெற்று மிகவும் சுகமான வாழ்க்கை வாழ முடியும். அது மட்டுமல்ல மிகவும் குறைவான கார்பன்டை ஆச்சைடை வெளியிடுவதால், உலகம் வெப்பமடைவது தாமதப்படுத்தப்படும் போன்ற சில நன்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
பேராபத்துகள்!
ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் அணு உலை அமைப்பதனால் வரும் பேராபத்துகள் வருவது தவிர்க்க இயலாது. உடனே சிலர் சொல்லுவது - எதில் ஆபத்து இல்லை - பேருந்தில் விபத்து நடக்கிறது, விமானத்தில் விபத்து நடக்கிறது அதற்காக அதில் செல்லாமல் இருக்கிறோமா? நண்பர்களே, இது போன்ற விபத்துகள் அதில் பயணம் செய்பவர்களோடு போய்விடும். ஆனால் அணு உலை விபத்து என்பது அதையும் தாண்டி - தாண்டி.. உதாரணத்திற்கு, ரஷ்யா, செர்னோபிலில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு உலை விபத்தின் கோரம் இன்றும் இருக்கிறது - அதனால் கதிர்வீச்சுகள் நிறைந்த நீர், காற்று இன்றும் பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பானதா?
சிலர் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள் -அல்லது  பிரதமர் சொல்லிவிட்டார், அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் - அணு உலை பாதுகாப்பானது என்று - அதுதான் கொட்டை எழுத்துகளில் மிக முக்கியமான செய்தியாக வருகிறது. பிரதமர் அது மட்டுமா சொன்னார், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்றும்தான் சொன்னார். அமைச்சர்கள் நாங்கள் எல்லாம் நாட்டுக்காக எங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும்தான் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையாகி விடுமா?
அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்னோபிலாக இருக்கட்டும் அல்லது புகுசிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது. ஜப்பான்காரனாலேயே அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒன்றை அமைக்க முடியவில்லை. அதென்ன ஜப்பான்காரனாலேயே - அதனால்தானே நாம் அவர்களது பொருட்களையே போட்டி போட்டு வாங்குகிறோம்.
எனவே அதில் இம்மியளவு குறைந்தாலும் - அணு உலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கல்மாடி கட்டிய ஒரு பாலம் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே இடிந்து விழுந்தது நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல மிகப் பெரிய திட்டங்களை செய்யும் யாராக இருந்தாலும் சில பெர்சென்ட்டுகள் கமிசன் தொடங்கி அப்புறம், பயன்படுத்தும் கம்பியில் சில மில்லி மீட்டர் குறைத்துப் போட்டால் சில கோடிகள் நமக்கு மீளும் என்று திட்டமிடுபவர்களும், இரண்டுக்கு ஒன்று என்று கலவை இருக்க வேண்டுமென்றால் அதை மூணுக்கு ஒண்ணாகப் போட்டால், இன்னும் சில கோடிகள் மிஞ்சும் என்றும் கணக்குப் போடும் நமது ஆட்களை நம்பி நாம் இந்த அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினால் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது.
கழிவுகளாலும் ஆபத்தா?
அதுமட்டுமல்ல - பேராபத்து அணுஉலை அமைப்பதில் மட்டுமல்ல - அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப் பெரிய விடயாமாக இருக்கிறது. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து என்பதைப் போல இந்தக் கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை ஏறக்குறைய 10,000  ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இது நம்ம ஊரில் நடக்கிற விசயமா. கழிவுகளை எங்கே கொட்டிப் பாதுகாக்கப் போகிறார்கள்?
தமிழின அழிப்பு!
அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத்திற்கான திட்டமும் அல்ல - ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்பு தமிழ்நாட்டில் குடிபுகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் கிள்ளுக்கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமியின்போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மாண்டு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது.
அப்புறம் எப்படித்தான் நாம் வளர்வது?
இதைப் பற்றிய அழிவைச் சொல்லுவதனால் நாம் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறோம் என்றோ அல்லது மின்சக்தி உற்பத்திக்குத் தடையாக? இருக்கிறோம் என்றோ அர்த்தம் அல்ல. வருடம் முழுவதும் சூரியன் ஆட்சி செய்கிற இந்த மண்ணில் அதிலிருந்து மின் உற்பத்தி தயாரிப்பது என்பதை மிகவும் சிரத்தையோடு செய்து விட்டாலே போதும் என்பதே நமது வாதம். இயங்குகின்ற அணு உலைகளை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மூடி விடுவோம் என்று ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். சூரிய ஒளி மிகவும் குறைவான நாட்களே குறைந்த சில மணி நேரங்களே தனது வீச்சைக் காட்டக் கூடிய நாடுகளே மாற்று வழிக்கான முயற்சியில் இறங்கியிருக்கும்போது நாம் அதற்கான முயற்சியில் இறங்குவதே சரி.
தேவையற்ற இழப்பை அழிவைச் சந்திக்கும் முன்பு நாம் விழித்துக் கொள்ளுவதே இப்போதையத் தேவை. இப்போது நடைபெறும் போராட்டத்தில் எல்லாரும் இணைவதும், அதனால் மாற்று முயற்சிகளுக்காக அனைவரும் குரலெழுப்புவதும் அவசியமாகிறது. நாமும் நமது சந்ததியினரும் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிக்கப்படாத காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும் உரிமையுண்டு. அந்த உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. மக்களுக்காக மக்களால் என்பது உண்மையானால் - மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் செவிசாய்த்துத்தான் ஆக வேண்டும்.

தூக்குத் தண்டனையை தூக்கிலிட வேண்டும்

வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை நிலையில் உள்ள பல உயிர்களைக் காப்பதற்காக அவர் கொள்ளையடித்தார். அந்த வால்மீகிதான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகியாக, இலக்கியப் படைப்பாளியாக மாறினார். இதேநிலை யாருக்கும் வரலாம் - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்
உலக நாடுகள் எங்கும் தூக்குக் கயிறு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் போன்றோர் மரண தண்டணை தொடர வேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.
1945லேயே அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. மக்களவையில் 25.11.1956இல் மரண தண்டனை ஒழிப்பு தனி நபர் மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது அன்றைய அமைச்சர் பொறுப்பிலிருந்த எச்.வி.படாஸ்கர் இதனை ஒழிக்க காலம் இன்னும் கனியவில்லை என்றார். 1957இல் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும், நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்நாளில், சி.ஏ.பாலனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ.பாலன் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். கடைசியாக கேரள உள்துறை அமைச்சராக இருந்த நீதிபதி கிருஷ்ணய்யரிடம் மனு ஒன்றை அளித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனை தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் விடுவித்தார். அப்போது அவர், "கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது" என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்தை சொல்லி வாதாடியுள்ளார்.
1962-67களில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்று தெரிவித்தார். டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு ஏராளமான கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றைத் திருப்ப அனுப்பாததால் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நின்றன. அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து பிரதமர் நேருவிடம் முறையிட்டார். ஜவகர்லால் நேருவும் ஒரு சிறப்புத் தூதரை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிக் கருணை மனுக்களை நிராகரித்துத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் நேருவின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1967இல் சட்டக் கமிசன் அறிக்கை தூக்குத் தண்டனை கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1953லிருந்து 1963 வரை இந்தியாவில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாக, ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறார் என்றால், அதற்கான அத்தியாவசியமான காரணத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று 1973இல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற தியாகத் தீபங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947இல் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்கார சார்ஜண்டை கொலை செய்ததற்காக குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் 1947ஆம் ஆண்டு அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நேதாஜி இயக்கத்தில் இருந்த கேப்டன் நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மலேசிய கணபதி தூக்கிலிடப்படும்போது பண்டித நேரு அதைத் தடுக்கக் குரல் கொடுத்தார். 1946இல் கோவை சின்னியம்பாளையத்தில் ஆறு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும், நக்சலைட் தலைவர் நாகபூசண் பட்நாயக், தமிழகத்தில் கலியபெருமாள், தியாகு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோது தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.
பண்டைய இந்தியாவில் மரண தண்டனையை பற்றி எவரும் அறியவில்லை. ஐந்தாம் நூற்றாண்டில் சீனத்திலிருந்து வந்த பாகியான் என்ற பௌத்த அறிஞர், மரண தண்டனை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹொய்சோ என்ற அறிஞர் இதே கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஆதி காலத்தில் உலகில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோவின் முயற்சியால் இக்கட்டுரையாளர் மூலம் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர் நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டுகளாக நடந்து வரும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.
தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்திய விடுதலைப் போரின் முதல் வீரர், நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால் தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.
1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது.
அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.
வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.
துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஐம்பது பேர் கையெழுத்திட்டு 1981 செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க இன்னும் ஐய்ந்தே நாள்தான் உள்ளது. வைகோவின் வேகமான முயற்சியால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.
இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.
இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் ஐந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.
1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் குருசாமிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயர செய்தியை தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்னையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லியில் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.
இருப்பதோ இரண்டு, மூன்று நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், "நீதிபதி அவர்களே குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு பாளையங்ககோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த மனுவை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்" என கேட்க சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது.
அதன் பின் பதிவாளருடைய அனுமதியின் பேரில் வழக்கு எண்ணாகி, நீதிபதி இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. மதியம் 2.30 மணிக்கு இடைவேளைக்கு பிறகு வழக்கு வருகின்றது. வழக்கில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை ஆஜரானார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை தெரிவித்து, மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையை தெரிவித்தனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரசிடம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்த கருத்துகள் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில் தூக்குக் கயிறை தூக்கிலிட்டது பெரும் செயலாக எனக்கு பட்டது. இந்த பிரச்னையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது.
இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலர் விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தலைவரான ஏ.நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சொ.அழகிரிசாமி, இலங்கைத் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (பேபி இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.
அதைப்போன்றே உச்ச நீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்னையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களை பாராட்டினர். இந்து பத்திரிகை இதுகுறித்து எழுதியது. இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.
இக்கட்டுரையாளர் அன்று சென்னையில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:
1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் 'அரிதினும் அரிதான வழக்கு'களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.
3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.
"தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப்படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!" என்றது அந்தத் தீர்ப்பு!
நீதிபதிகள் தம் தீர்ப்பில் விச ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர் நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப்பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).
மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை "கன்விக் வார்டர்" ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.
குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்€ல் இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!
குருசாமி வழக்கு மூலம் திரு பி.எச்.பாண்டியன் ஆஜரான வழக்கில் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர் நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.
உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இதுவரை 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், பூட்டோ போன்றோர் தூக்கிலிடும்பொழுது உலக அளவில் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. தூக்குத் தண்டனை பிரச்னையில் சீனா, ஈரான், ஈராக், பாக்கிஸ்தான், சூடான், அமெரிக்கா போன்ற நாடுகள் சற்றும் மனம் இரங்காமல் கடுமையாக நடந்து கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு பல மாநிலங்களில் கடுமையான முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்ரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளே தூக்குத் தண்டனையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளன. சிங்கப்பூர் இதில் முதல் இடம் வகிக்கிறது.
சிங்கப்பூரில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள், எந்தவித அறிவிப்புமின்றி ஏதாவதொரு வெள்ளிக் கிழமையன்று தூக்கிலிடப்படுவர். பின்னர் தான் வெளி உலகுக்கே தெரிய வரும். நைஜிரியாவைச் சேர்ந்த 21 வயதே ஆன கால்பந்தாட்ட வீரர் டோச்சி, துபாய் அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட்டபோது, பலர் அவருக்கு பாகிஸ்தான் சென்று விட்டால் உனது கனவு நனவாகும் என்றனர். இதனை நம்பி இஸ்லமாபாத் சென்றார். அங்கும் அவரது ஆசை நிறைவேறாமல், கையில் பணமில்லாமல் ஒரு சர்ச்சில் தங்கினார். அங்கு ஸ்மித் என்ற ஒரு நபர் டோச்சியை சந்தித்து பேசி, சிங்கப்பூர் மார்க்கமாக டோச்சியின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வழியனுப்பினார். அப்போது அவர் சில மாத்திரைகளை டோச்சியிடம் கொடுத்து இதனை சிங்கப்பூரில் மாலச்சி என்ற என் நண்பர் பெற்றுக் கொள்வார் என்று சொல்லியுள்ளார். டோச்சி இந்த மாத்திரைகளுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபொழுது, அவரை சந்தேகப்பட்டு கைது செய்தனர். இரண்டு ஆண்டு காலமாக வழக்கு விசாரணைக்குப் பின் அப்பாவியான டோச்சி தூக்கிலிடப்பட்டார்.
இங்கிலாந்து நாட்டில் டங்கன் பிரபு, பிரபுக்கள் அவையின் தலைவராக இருந்தபோது முதன் முதலாக தூக்குத் தண்டனை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவை கொலை செய்தவர்களுக்குகூட இங்கிலாந்து அரசு தூக்குத் தண்டனை வழங்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் 1995இல் மரண தண்டணை ஒழிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.நா. பொது மன்றம் தூக்குத் தண்டனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எதிர்த்தன. இத்தீர்மானத்தை 99 நாடுகள் ஆதரித்தன. 52 நாடுகள் எதிர்த்தன. 18 நாடுகளில் மரண தண்டனை போர்க்கால குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டும், 27 நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றன. 1976ஆம் ஆண்டு கனடா நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கனடாவில் இதற்கு முன்பு கொலை குற்றங்கள் 3.09 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து கொலைக் குற்றங்கள் குறைந்து விட்டன. 1983ஆம் ஆண்டுகளில் அங்கு 2.74 என்ற அளவில் கொலைக் குற்றங்கள் நடந்தேறின.
1985ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் லஞ்சம் வாங்கியதாக சோவியத் நாட்டிலும், சீனாவில் அரசுக்கு விரோதமாக உளவுத் தொழிலில் ஈடுபட்டதற்கும், விபசாரத்திற்கும், சீனா, கயானாவிலும், பொருளாதாரக் குற்றத்திற்காக ஈராக் நாட்டிலும், கற்பழிப்புக் குற்றத்திற்காக சீனா, எகிப்து, சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, டுனீசியா ஆகிய நாடுகளிலும், களவு மற்றும் பயங்கர ஆயுதங்களை கையாண்டதற்காக சீனா, நைஜீரியா, சவுதி அரேபியா, சிரியா, உகாண்டா போன்ற நாடுகளிலும், போதைப் பொருள் குற்றத்திற்காக ஈரான், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும், சீனாவிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற வாதமும் உள்ளது. 1949ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு சட்ட மாநாட்டில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சுமார் 75 நாடுகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. ஐக்கிய அமெரிக்க நாட்டில் நடந்த மாநாட்டில் 70 வயது கடந்த முதியவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் நிறைவேறியது. இருந்தபோதிலும், 76 வயதான மகமத் முகமது தகா என்ற சூடான் நாட்டுத் தலைவரும், 78 வயதான பையோடர் ஃபெடரன்கோ என்பவரும் அமெரிக்காவிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டு அரசியல் காரணமாக தூக்கிலிடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உலகளவில் நடைமுறையில் உள்ளது.
தூக்கிலிடுதல், துப்பாக்கியால் சுடுதல் ஆகிய இரண்டு நடைமுறைகள் இந்தியாவில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை, கொலை செய்ய முயற்சி, கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிராகப் போர் ஆயத்த வேலைகளை செய்தல், எதிரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.
இந்திய இராணுவச் சட்டம் 1950இன் படியும், விமானப் படைச் சட்டம் 1950இன் படியும் கடற்படைச் சட்டம் 1956இன் படியும் படைவீரர்கள் தவறு செய்தால் மரண தண்டனை விதிக்க இடமுண்டு. பயங்கரவாதிகளுக்கு 1987ஆம் ஆண்டின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்க வழியுள்ளது. 1967ஆம் ஆண்டு சட்ட வரையியல் குழு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை அளித்தது. இந்தியாவில் மாவட்டத் தலைமை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றம் ஆகியவை மரண தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மரண தண்டனைக் குற்றவாளிகள் மீது கருணைக் காட்ட அதிகாரமும் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை அப்சல் குரு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் இன்றைக்கும் தூக்குக் கயிற்றின் பிடியில் இருக்கின்றனர். அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அன்றைய காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் "இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது" என்று குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகள் தோல்வியடையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்தை ஒட்டியே எழுத்தாளர் அருந்ததி ராயும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, அப்சலின் மனைவி கருணை மனு ஒன்றை உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் அனுப்பி இருந்தார்.
மரண தண்டனை குறித்து எதிர் சிந்தனைகளை விட்டு ஆக்கபூர்வமாக நாம் சிந்திக்க வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவ்வகையில் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட இந்தியாவில் இந்திராவும், ராஜிவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை எல்லாம் தூக்கிலிட்டு விட்டால் குற்றங்கள் குறையும் என்பது எள்ளளவும் உண்மையல்ல. கீதா சோப்ரா, சஞ்சய் சோப்ரா ஆகிய இருவரை கொன்றதற்காக 1980ஆம் ஆண்டில் பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். 1984இல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக மக்பூல் பட் என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதனால் எல்லாம் குற்றங்கள் குறைந்தனவா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த தண்டனைகளுக்கு பிறகுதான் ஆட்டோ சங்கர், தற்போது அப்சல் குரு போன்றவர்கள் உருவாகினர்.
தற்போது உலகளவில் 1,252 பேர் தூக்குத் தண்டனை நிழலில் தவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை 389 பேர் தூக்குத் தண்டனை கைதிகளாவர். ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானத்தின்படி 2007இல் ஆம்னஸ்டி இன்டர்நேசனல் இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினர். அக்கடிதத்தில் நீதிபதிகள் ராஜேந்திர சச்சார், சேத்தி, அட்மிரல் எல்.ராமதாஸ், மோகினி கிரி, உபேந்திரா பக்கி, ஆஸ்கார் அலி இன்ஜினியர், அருணா ராய், ஆயிஸ் நந்தி, ஆனந்த பட்டவர்த்தன் என எண்ணற்றோர் கையொப்பமிட்டிருந்தனர். உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு பின் தான் கருணை மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு கருணை மனுவை அனுப்பினாலும் அதற்கான மேல் நடவடிக்கைகள் இல்லாததால் உடனடியாக நீதி கிடைப்பது தாமதமாகின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இன்னொரு விசித்திரமும் நடைபெற்றது. ஒரு கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூவரும் தனித்தனியாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முறையிடுகின்றனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்றொருவருக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. வேறொருவர் குடியரசுத் தலைவரின் கருணையால் உயிர் தப்புகிறார். இவ்வாறு நீதிபதிகளின் தீர்ப்புகள் மாறுபடுகின்றன.
1980ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "சாட்சிகளை ஆழ்ந்து விசாரித்து தீர்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாது அதன் பின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். அரிதினும் அரிதாக மரண தண்டனைகள் விதிக்கப்படலாம்" என்று கூறியுள்ளது. திருச்சி சிறையில் வாடிய பெரிய கருப்பன், கோவை சிறையில் இருந்த அவிநாசி ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இராஜஸ்தான் மாநிலத்தில் சதி குற்றத்திற்காக பலருடைய பார்வையில் படும்படி மரண தண்டனையை பலருக்கு விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து இந்திய அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் 1985ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் "ஒரு மனிதத் தன்மையற்ற குற்றத்தை மனித தன்மையற்ற தண்டனையின் மூலம் சந்திக்கக் கூடாது" என்று கூறியது.
1985ஆம் ஆண்டு மார்ச்சில் இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையைப் பற்றி விவாதம் நடந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நீக்க விருப்பம் உள்ளவராக இருந்தார். ஆனால், அன்றைய உள்துறை அமைச்சர், "தற்சமயம் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார். 28.4.1989 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனை போன்ற பயங்கத் தண்டனைகளை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு டில்லியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயபிரகாஷ் மரண தண்டனையை எதிர்த்தார்.
உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில், "அரசியலமைப்புச் சட்டம் 72, 161 பிரிவுகள் தவறான வழியில் அல்லது பொறுப்பற்ற தன்மையில் பயன்படுத்தப்படுகின்ற போது அதனை திருத்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு. ஒருவருக்கு மன்னிப்போ அல்லது கருணையோ காட்டும்பொழுது சமுதாயத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டத்தை சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் குற்றவியல் சட்டம் 302ஆவது விதிப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றியது. இதே போன்ற சட்டம் இங்கிலாந்தில் இன்று ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் இன்றும் நடைமுறையில் வைத்துக் கொண்டு மனித உயிர்களை பறிப்பது எந்த வகையில் நியாயம்?
இன்றைக்கு தூக்கு மர நிழலில் தவிக்கும் பலருக்கு வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குருசாமி நாயக்கர் போன்று விடா முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கான பலன்களை அவர்கள் எட்டலாம். தூக்கின் மூலம் மானிட உயிர்களை பறிப்பதால் எந்தவித ஆக்கப்பூர்வமான பலன்களும் வரப் போவதில்லை. நாகரீகத்தை நோக்கிச் செல்கின்ற மானிடமும், மனிதாபிமானமும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலையில் சிக்கித் தவிக்கும் மூன்று பேரும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த தண்டனையின் கீழ் தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள மரண தண்டனை கைதிகள் அனைவரும் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் பயணிக்கவே விரும்புகின்றனர். நீர்க் குமிழியின் ஆயுள் சில நிமிடங்களே, மானிடத்தின் ஆயுள் வருடங்களில். இந்த போக்கில் பழி வாங்கல், அழித்தல் என்பது பழங்கால பிரிட்டானிய வரலாற்றில், ஆங்கிலேய சாக்ஸன் ஆட்சி காலத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெயில் போடுவது, தீயில் போடுவது, காலை வெட்டுவது போன்ற கொடூரமான தண்டனைகள் போன்றதாகவே இதுவும் உள்ளது. எனவே, இதில் மன மாற்றங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஐ.நா. பெருமன்றமும் தூக்குத் தண்டனையை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியுள்ளது.
பொது மன்னிப்பு என்ற வார்த்தை நடைமுறையில் இருப்பது பயனற்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல வழக்குகளில் சம்பந்தமில்லாத பலர் பலியாகியிருக்கின்றனர். எல்லாவற்றும் சூழலும், நடைமுறைகளுமே காரணமாகின்றன. எது ஒன்றும் மாற்றத்திற்குரியதுதான். மாற்றங்கள் சில நொடிகளில் ஏற்படும். இன்றைக்கு சரி எனப்படுவது நாளையே தவறாகி விடும். அப்போது வருந்தி என்ன பயன்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதன்பிறகு பல அறிவியல் அற்புதங்களை அவன் படைத்தான். அந்த அற்புதங்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்றால் மரண தண்டனையில் மாற்றங்கள் அவசியம் வரவேண்டும். அதுவே நாகரீக பாதைக்கு அழைத்துச் செல்லும் அணுகுமுறையாகும்.
மரண தண்டனை குறித்து பிரச்சாரங்களை அதற்கான ஆர்வலர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர். இந்த இயக்கத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருக வேண்டும். அந்த ஆதரவில் தான் இந்த நோக்கம் வெற்றி பெறும். குழந்தைகள் பிறக்கும் பொழுது தவறு செய்ய வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. வளர்ந்த பின் வளருகின்ற சூழலை ஒட்டியே தவறு செய்ய முற்படுகிறார்கள். மானிடவியலும், சமூகவியலும், அரசியலும் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உறுதியாக ஏற்படும்.
ஆதிகாலத்தில் ஒரு சட்டம் நிலவி வந்தது. குற்றவாளி குற்றம் செய்தால் அவன் என்ன குற்றம் செய்தானோ அதற்கு தகுந்தமாதிரியே தண்டனை அமையும். அதாவது பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்பது போன்ற தண்டனை. அதேபோன்று இப்பொழுதும் ஒரு உயிரை எடுத்தவனின் உயிரையும் எடுக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவே குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புகிறோம். அந்த தனிமையில் அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருந்த வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற குற்றங்களைவிட, தூக்குத் தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில்தான் குற்றங்கள் அதிகமாக உள்ளன. நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியது போல, குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டுமேயன்றி அவர்களின் உயிரை பறித்தல் தகாத செயலாகும்.

நன்றி: கீற்று

Saturday, May 26, 2012

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள........

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.
For more details....please visit below links... http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) and http://en.wikipedia.org/wiki/File:Ancientlemuria.jpg....................Please hit share this.                                                                           

Thursday, May 24, 2012

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள்! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் ...


உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான்.
இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை! முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்!
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு.
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்!
காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள். நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர். முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்).
தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம். 2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.
வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்! ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன.
ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.
நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள்.
ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர்.
5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான்.
நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி.
இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறதுஇது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார்.
ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது.
கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல். ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.-வை ஒத்த டி.என்.-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும். ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது.